திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை தொடங்கி வைக்க வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தள்ளுவண்டி வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா பெரும் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதன்காரணமாக திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மளிகை கடை காய்கறி சந்தைகள் உள்ளிட்டவை மூடப்பட்டது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் நடமாடும் தள்ளுவண்டி காய்கறி கடைகள் மூலம் விற்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியமங்கலம் மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில் நடமாடும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை கடைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி இன்று கொடியசைத்து துவக்கி வைத்து காரில் ஏறச் சென்றார்.
அப்போது அங்கு வந்த 20க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை முற்றுகையிட்டனர் அருகிலிருந்த மாநகராட்சி அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது அமைச்சர் உங்கள் கோரிக்கை என்னவென்று கேட்டார். அப்போது தள்ளுவண்டி வியாபாரிகள் இந்தக் தள்ளுவண்டி கடை நடத்துவதின் மூலமாக தான் தங்களின் குடும்பத்நின் வாழ்வாதாரம் நடந்து வருவதாகவும், தற்போது மாநகராட்சி அலுவலகத்தில் தள்ளுவண்டி கடை நடத்துவதற்கு அனுமதி கேட்டு வருவதாகவும், ஆனால் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் உள்ள மாநகராட்சி அதிகாரிகள் எங்களுக்கு அனுமதி தராமல் கடந்த 4, 5 நாட்களாக அலை கழிப்பதாக கூறினர். உடனே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அங்கிருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் இவர்களுக்கும் தள்ளுவண்டி கடை நடத்துவதற்கு அனுமதி வழங்குங்கள் என கூறிவிட்டு சென்றார்.
Facebook
WhatsApp
Email
Messenger
Post navigation