மின்வாரிய பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். பிபி 2-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும். துணை மின்நிலையங்கள் மற்றும் சில பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதையும் மற்றும் ரீ டிப்ளாய்மெண்ட் செய்வதையும் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி
திருச்சி பெருநகர் வட்டக் கிளை தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திங்களன்று மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க ராஜமாணிக்கம், சி.ஐ.டி.யூ.செல்வராஜ்,
டி.என்.இ.பி.இ.எப், சிவ.செல்வன், பொறியாளர் சங்க சங்கர்கணேஷ், பொறியாளர் கழக சந்தான கிருஷ்ணன், சம்மேளனம் கிருஷ்ணமூர்த்தி, ஏ.டி.எம்.கே அண்ணாதுரை ஆகியோர் பேசினர். போராட்டத்தில் பொறியாளர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.