திருச்சி மாவட்ட நீதிமன்றம் கொரோனா காலத்தில் வழக்கறிஞர்கள், புகார்தாரர்கள் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கப்பட்டதுடன் வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டனர்.அதேநேரம் நீதிமன்ற வளாகத்தினுள் செயல்பட்டு வந்த பத்திரங்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையானது நீதிமன்றத்திற்கு வெளியே தற்காலிகமாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொரோனா முடிந்தும் அந்த கீற்றுக் கொட்டகை அகற்றப்படாமல் நீதிமன்றத்தின் அழகையும், சுகாதாரத்தையும் கெடுக்கும் வகையில் தொடர்ந்த நீதிமன்றத்தின் முன்புறம் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வந்தன.இது குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் ஆகியோரிடம் அந்த ஆக்கிரகங்களை அகற்ற வலியுறுத்தி நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளர்களக்கு இன்று நீதிமன்றம் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உத்தரவிட்டனர்
அதனை தொடர்ந்து கடை உரிமையாளர்கள் இன்று காலை தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.