திருச்சி கேர் அகாடமியில் சிகரம் நோக்கி எனும் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டில் சிகரம் நோக்கி கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள கேர் அகாடமியில் இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு டாக்டர் தமிழன்பன் வரவேற்புரை ஆற்றினார். கேர் அகாடமியில் இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ்செல்வன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக விண்வெளி விஞ்ஞானி பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு கேடயம் வழங்கி சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து விஞ்ஞானி டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்..,
கடந்த, 1952ம் ஆம் ஆண்டு நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் கால் பதித்தது உண்மை. இதன்மூலம், நிலவுக்கு, விண்வெளிக்கு மனிதர்கள் சென்று வர முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது. தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் விண்வெளியில் பல மாதங்கள் தங்கி இருப்பதை பார்க்கலாம். அதுபோல, நிலவிலும் குடியேறும் காலம் விரைவில் வரும்.
நிலவில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மிக முக்கியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தற்காலிகமாக செயல்படும் விண்வெளி மையத்தை நிலவில் நிரந்தரமாக அமைக்க முடியும். மனிதர்கள் அங்கேயே குடியேறி, விவசாயமும் செய்ய முடியும் என கூறினார்.