திருச்சி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சக்தி ரோட்டரி கிளப் இணைந்து மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது இந்த பேரணியை அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அருண் மற்றும் ரோட்டரி கிளப் 3000 கவர்னர் ஜெரால்ட் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்பக புற்றுநோய் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பலூன்களை கையில் ஏந்தியபடி அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர்கள் மற்றும் பி வி எம் பள்ளி மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியானது திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் துவங்கி மாருதி ஹாஸ்பிடல் வழியாக எம் ஜி ஆர் சிலை ரவுண்டானா வழியாக சென்று அரசு மருத்துவமனையை சென்று அடைந்தது.
இதில் சக்தி ரோட்டரி கிளப் தலைவர் மியாட்ரி வனஜா, செயலாளர் சசிகலா செல்வராஜ் பொருளாளர் ரோஷன் மற்றும் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பயிற்சி செவிலியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.