திருச்சி அண்ணா சிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவோடு ஏந்தி அரை நிர்வாண ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களான மக்காச்சோளம் கடலை மரவள்ளிக்கிழங்கு வெங்காயம் கரும்பு போன்றவைகளை காட்டு பன்றிகள் அழித்து நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும்
விவசாயிகளுக்கு கிடைத்து வரும் இலவச மின்சாரத்தை தடை செய்ய மோடி அரசு புதிய மின்சார திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதற்கு தமிழக அரசு துணை போக கூடாது புதிய மின்சார திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும் 2021 22 ஆம் ஆண்டுகளில் பயிர் செய்தவர்களுக்கு மழையின் காரணமாக மகசூல் குறைவு ஏற்பட்டு நஷ்டம் அடைந்துள்ளது.
இதற்கு அரசு இழப்பீடு ஏக்கருக்கு 20 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும். காவேரி குண்டாறு இனிப்பு திட்டம் அறிவித்து இருபது ஆண்டுகள் ஆகியும் நிறைவேறவில்லை அதனை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருவோடு ஏந்தி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்