திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாட்டில் மாநிலத்திற்கான தனித்துவமான மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக நீதியரசர் முருகேசன் ( புது தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர்) தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் , உயர்மட்டக் குழுவின் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கருத்து கேட்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்கள் முனைவர் எல். ஜவஹர் நேசன், பேராசிரியர் ராமானுஜம், பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், முனைவர் அருணா ரத்னம், துளசிதாஸ், பாலு, ஜெயஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.