திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான மாதிரி ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது இந்த மாதிரி ஒத்திகை பயிற்சியை தமிழக அரசு பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மற்றும் திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் மணி வாசன் பார்வையிட்டார்.
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கண்டோன்மென்ட் ஸ்ரீரங்கம் திருவரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் பேரிடர் காலங்களில் தீயணைப்பு துறையினரின் பணிகள் குறித்து மாதிரி ஒத்திகையை தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். குறிப்பாக வெள்ளத்தில் சிக்கிய நபரை எப்படி காப்பாற்றுவது தீ விபத்தில் சிக்கிய வரை மீட்பது உள்ளிட்டவற்றை செய்து காட்டினர்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்தியநாதன், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை உள்ளிட்ட தீயணைப்பு துறை மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.