திருச்சி வயலூர் மெயின் ரோடு ரெங்கா நகர் பகுதியில் உள்ள அமிர்தா வித்யாலயம் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது இந்த கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர் உஷா ராணி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த அறிவியல் கண்காட்சியில் இந்திய கலாச்சாரம் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் விவசாயிகளின் முதுகெலும்பான விவசாயம் பற்றிய மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள பண்டைய காலங்களின் கலாச்சாரங்கள் கோவில்கள், கட்டிடங்கள் குறித்தும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு காட்சிகள் இடம் பெற்றது. மேலும் மாணவர்களின் தனித் திறமையை வெளிப்படுத்தும் விதமாக அதிநவீன அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மின் சிக்கனம், தண்ணீர் சேமிப்பு மற்றும் சென்சார் குப்பைத்தொட்டி, ரோபோட்டிக் சென்சார் கார், இன்குபேட்டர், ஏர் கூலர், உள்ளிட்ட ஏராளமான அறிவியல் சம்பந்தமான மாணவர்கள் படைப்புகள் இடம் பெற்றது.
குறிப்பாக மாணவர்கள் உருவாக்கிய அதிநவீன தொழில் நுட்பமான கருவிகளின் மூலம் தெருக்களில் மின் விளக்கு எரியவில்லை என்றால் உடனடியாக எஸ் எம் எஸ் மூலம் மாநகராட்சிக்கு தகவல் தெரிவிப்பதற்க்கான அதிநவீன மின்சாதன தொழில்நுட்பம்,
மேலும் வயதானவர்கள் மற்றும் கண் தெரியாதவர்கள் சாலையில் நடந்து செல்லும் போது எதிரே ஏதாவது வாகனங்கள் அல்லது வேறு ஏதும் இருப்பின் அதனை சென்சார் மூலம் தெரியப்படுத்துவதும் மேலும் அவர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் அதில் உள்ள பட்டனை அழுத்துவதன் மூலம் அவர்களது உறவினர்களுக்கு எஸ் எம் எஸ் செல்லும் வகையிலும் மேலும் அந்த கைப்பிடித் தடி கீழே விழுந்தால்
அதை அவர்களே எடுத்துக் கொள்ளும் வகையில் அலாரம் உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்பட்ட சென்சார் ஸ்டிக்கை மாணவர்கள் தயாரித்துள்ளனர். மாணவர்களின் இந்த அரிய வகை கண்டுபிடிப்புகளை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.