திருச்சி மாவட்டம், காட்டூர் பாப்பாக்குறிச்சி பகுதியில் உள்ள, அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” தொடங்கி வைத்து, 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களைக் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக தலைவர் இடிமுரசு இஸ்மாயில் மற்றும் அர் ரகுமான் பள்ளிவாசல் இஸ்லாமியர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி திருவெரம்பூர் காட்டூர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்களில் இறப்பவர்களை அடக்கம் செய்ய கபர்ஸ்தான் (மையவாடி) இல்லை எனவே எங்களுக்கு அரசு சார்பில் கபர்ஸ்தானுக்கு இடம் ஒதுக்கி உதவுமாறு காட்டூர் அர் ரஹ்மான் மஸ்ஜித் பள்ளிவாசல் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அருகில் பள்ளிவாசல் தலைவர் சையது உஸ்மான், செயலாளர் ஹைதர் அலி மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் உடன் இருந்தனர்.