திருவெறும்பூர் தொகுதி க்கு உட்பட்ட கிழக்குறிச்சி ஊராட்சி நத்தமாடிப்பட்டி பகுதியில் புதிய ரேஷன் கடையினைபொதுமக்களின் பயன்பாட்டிற்கு பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
நத்தம் மாடிப்பட்டி பகுதி பொதுக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்குறிச்சி ரேஷன் கடை யில்தான் இதுவரை பொருட் கள்வாங்கி வந்தனர். நெடுந்த லைவு சென்று வருவதில் சிரமம் இருப்பதாக அமைச்ச ரிடம் வைத்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்தப் பகுதியில் ரேசன் கடைதிறந்து வைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச் சர் மற்றும் மாநில இளைஞ ரணி செயலாளரும்மான உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு காலை உணவை அப்பகுதியில் உள்ள மக்க ளுக்கு அமைச்சர் வழங்கினார். விழாவில் திமுக திரு வெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் கிழக் குறிச்சி ஊராட்சி தலைவர் ஜோஸ்பின் ஜெயராஜ்,அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.