தேசிய சித்த மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் 6வது சித்தர் தின விழா வருகிற ஜனவரி 8, 9, ஆகிய நாட்கள் கொண்டாப் படுகிறது. இது குறித்து திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அலுவலகத்தில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் மீனாகுமாரி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-சித்தர் தின விழா வருகிற ஜனவரி 8, 9 ஆகிய 2 நாட்கள் திருச்சி கருமண்டபம எஸ் பி எஸ் மஹாலில் நடைபெறுகிறது. மத்திய ஆயுஸ் அமைச்சகம் மற்றும் குடும்ப நலவாழ்வுத்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.இதில் சித்த மருத்துவத்தின் பங்களிப்பு மகத்தானதாக இருந்தது. ஒருங்கிணைந்த சிகிச்சை முறையின் காரணமாக இந்திய அளவில் தமிழகத்தில் கொரோனா இறப்பு சதவீதம் மிகக் குறைவாக இருந்தது.முதல் அலையின் போது தமிழகத்தில் 30 சித்தா கேர் சென்டர்கள் தொடங்கப்பட்டன. அதன் பின்னர் இரண்டாவது அலை மிகப் பெரிய சவாலாக விளங்கியது.
அப்போதும் சித்த மருத்துவத்தின் பங்கு பெரிய அளவில் இருந்தது தற்போது பிரதமர் மோடி குஜராத்தில் ஆயுள் அமைச்சகம் மூலம் ஒரு ஆய்வு மையத்தை உலக சுகாதார மையத்துடன் இணைந்து ரூ. 300 கோடியில் ஆய்வு மையத்தை தொடங்கியுள்ளார்.இதில் மண்ணின் மரபு சார்ந்த ஆயுஸ் மருத்துவத்தை அறிவியல் பூர்வமாக கொண்டு செல்ல பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.மரபு சார்ந்த மருத்துவமும் அறிவியலே என்பதை அலோபதி மருத்துவர்களும் ஒத்துக்கொள்ள தொடங்கியிருக்கின்றார்கள். இது எதிர்காலத்தில் இதய நோய் சர்க்கரை வியாதி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சையிலும் சித்த மருத்துவத்தின் பயனை உலகம் விரைவில் அறியும். திருச்சியில் நடைபெறும் இந்த சித்த தின விழாவில் மத்திய அமைச்சர்கள் மாநில அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மூலிகை கண்காட்சி மற்றும் பேரணி நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.