திருச்சி மாநகர் பகுதிகளில் நாய்களின் அளவு அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்த திருச்சி கோனைக்கரை பகுதியில் நாய்களுக்கான பிரத்தியேக கருத்தடை மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது ஆகினும் மாநகராட்சி ஊழியர்கள் மெத்தனம் காரணமாக நாய்களை பிடிக்காமல் இருந்து வருகின்றனர் இதனால் நாய்கள் குட்டிகளை ஈன்று வருகிறது
இதன் காரணமாக மாநகர் முழுவதும் நாய்கள் பெருகி வருகின்றன மேலும் நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது அதனால் சிலர் நாய் குட்டிகளை கொல்ல முற்படுகின்றனர்
இதன் காரணமாக நாய்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி சுருதி என்ற இளம் பெண் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாநகர் பகுதியில் உள்ள பிறந்து சில நாட்களே ஆன நாய்க்குட்டிகளை எடுத்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார் மேலும் தமிழக அரசு சார்பாக நாய் கருத்தடைக்கு 20 கொடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதனை முறையாக பயன்படுத்தி கருத்தடை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்