திருச்சி மாவட்ட மணப்பாறை டிஎன்பிஎல் பகுதி மக்கள் நல சங்கத்தில் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திலீப்குமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் சந்தித்து மனு அளித்தனர்.
அம்மனுவில் திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பேப்பர் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அருகில் உள்ள முண்டிப்பட்டி, பெரியபட்டி, சித்தாநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செல்வதால் அப்பகுதியிலுள்ள குடிநீர் வீணாவதுடன், விவசாயம் பாதிக்கப்பட்டு கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்சாலை இருந்து வெளியேற்றப்படும் காற்று மாசால் சுமார் 20கிலோ அளவு காற்று பரவி மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு கண்ணெரிச்சல், தோல், அரிப்பு, மூச்சு விடுதலை உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகிறது.
எனவே தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை வேண்டும். இல்லை என்றால் விரைவில் கிராமங்கள் சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் தங்களை ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டையை வழங்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.