ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தின் புனித ஸ்தலத்தினை சுற்றுலா மையமாக ஜார்கண்ட் மாநிலம் அரசு அறிவித்ததை கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள ஜெயின் சமூகத்தினர் பேரணி நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் ஜெயின் சமூகம் சார்பில் பேரணி நடைபெற்றது ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தின் புனித ஸ்தலமான சிகர்ஜி என்ற ஸ்தலத்தினை ஜெயின் சமூகத்தினர் தங்களது புனித ஸ்தலமாக கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் ஜார்கண்ட் மாநில அரசு இந்த ஸ்தலத்தினை சுற்றுலா ஸ்தலமாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
இதனை கண்டித்து திருச்சியில் உள்ள ஜெயின் சமூகம் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. இந்த பேரணி திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் இருந்து துவங்கி பெரிய கடை வீதி சிங்காரம் தோப்பு, பெரிய செட்டி தெருவில் உள்ள ஜெயின் சமூகத்தின் சொந்தமான கோவிலை வந்து அடைந்தது இதில் 300-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.