பொங்கல் திருநாளின் 4-வது நாளான இன்று காணும்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசிபெறுதல் போன்ற கலாச்சாரங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இன்று காணும் பொங்கல் என்பதால் தமிழக முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் காலை முதலே பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் மேலும் சுற்றுலா தலங்களில் அதிக போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
அதே போல திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலம் திருச்சியில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி அருகே உள்ள கரூர், தஞ்சாவூர், அரியலூர் போன்ற பகுதியிலிருந்து பொதுமக்கள் இங்கு காலை முதலே வருகை தர துவங்கியுள்ளனர். இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் இங்கு வந்து இங்குள்ள பூங்காவில் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, ராட்டினம் போன்றவற்றில் விளையாண்டும் மற்றும் காவிரி நீரில் குளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்
திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்தில் அசம்பாவிதம் எதும் ஏற்படாத வகையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் படுகப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்வுடன் காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்