திருச்சி ஹாக்கி அகாடமி சார்பில் இரண்டு நாள் நடைபெறும் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. புரவலர் ரவி தன்ராஜ் போட்டியை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் திருச்சி ஹாக்கி அகாடமியின் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இப்போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், மணப்பாறை பகுதிகளை சேர்ந்த 11 அணிகள் கலந்து கொண்டுள்ளன. நாக் அவுட் முறையில் நடைபெறும் இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை மாலை பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.