கொரோனா நோய் தொற்றின் 2-ம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கும் அதனைத் தொடர்ந்து ஜூன் 6-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் தேவையில்லாமல் ஊர் சுற்றிய இருசக்கர வாகனங்கள் 6566, ஆட்டோ 195 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 73 என மொத்தம் 6916 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து திருச்சி கே கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைத்தனர். மேலும் வாகனங்களின் பாதுகாப்பு கருதி தினமும் வஜ்ரா போலீஸ் வாகனம் மூலம் தண்ணீர் தௌிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீண்டும் பொதுமக்களிடம் ஒப்படைக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையெடுத்து . முதற்கட்டமாக இன்று காலை கடந்த மே 15ம் தேதி முதல் 18-ம் தேதி வரை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 300 இரு சக்கர வாகனங்கள் ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பொதுமக்களிடம் போலீசார் ஒப்படைக்கும் பணி இன்று துவங்கியது. அதன்படி இன்று காலையே பொதுமக்கள் தங்கள் வாகனங்களை எடுத்துச்செல்ல திருச்சி கே கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் குவிந்தனர் போலீசார் அவர்களின் ஆவணங்களை சரிபார்த்து வாகன உரிமையாளரிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டது. Facebook WhatsApp Email Messenger Post navigation மத்திய பஸ் நிலையத்தில் இன்று முதல் மீன் மார்க்கெட் செயல்படத் தொடங்கியது ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 7500 நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்.