திருச்சி மாநகர் மாவட்ட ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரன் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆட்டோ ஓட்டுவதற்கான பல்வேறு வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகளை மட்டுமே ஏற்றிக் கொண்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இ- பதிவு செய்த பயணிகளை மட்டுமே பயணிக்கும் முறையில் வண்டி இயக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே தமிழக அரசு இ-பதிவு முறையை உடனே ரத்து செய்ய வேண்டும். ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஓட்டுநர்களுக்கும் ரூபாய் 1500 நிவாரணம் வழங்க வேண்டும்.தவணைத் தொகை, வாகனங்களுக்கான FC உரிமம் புதுப்பித்து காலம் உள்ளிட்ட அனைத்தையும் டிசம்பர் 2021 வரை காலம் நீடித்து வழங்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில செயலாளர் ரங்கராஜ் மாவட்ட ஆட்டோ தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *