தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அறிவித்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது தீர்ப்பை அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். அதில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து ஓபிஎஸ்-இன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இதன் மூலம் அதிமுக பொதுக்குழு செல்லும் என்பது உறுதியாகியுள்ளது. அதன்படி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நடைமுறைகள் செல்லும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து திருச்சி அதிமுக மாணவர் அணி மாவட்ட செயலாளரும், ஆவின் சேர்மன் என்ஜினியர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி 14 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அரவிந்த் தலைமையில் கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதாமுகவினர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மெயின் காட் கேட் பகுதியில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துக்கள் கூறி அதிமுக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடினர்.