வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான் ஜார்கண்ட் சண்டீஸ்கர் மாநிலங்களில் சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதி படி வெற்றி பெற்ற பின் உடனடியாக பஞ்சாப் ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களில் சிபிஎஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில் திமுகவின் சட்டமன்ற தேர்தல் கள வாக்குறுதி என் 39 படி சி பி எஸ் ஐ ரத்து செய்ய கோரியும் சிபிஎஸ் திட்டத்தில் இருந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணிக்கொடை வழங்க கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்று மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமையில் மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
உண்ணாவிரத போராட்டத்தை துவக்க உரையாக முன்னாள் பொதுச் செயலாளர் முத்துசாமி கலந்து கொண்டு துவக்க உரையாற்றினார். போராட்டத்தில் ஜான்சன் சகாயநாதன் வானிலை இணை ஒருங்கி ணைப்பாளர் முன்னிலை வகித்தார், கோரிக்கை விளக்கவுரை பிரடெரிக் எங்கெல்ஸ் வழங்கினார்.
கலியமூர்த்தி திருச்சி மாவட்ட தலைவர்,நீலகண்டன் மாநில பொருளாளர்,லட்சுமணன் மாநில தலைவர்,தமிழ்ச்செல்வன் பொதுச் செயலாளர்,மோகன் துணை பொது செயலாளர், நவீன் குமார் SSTA மாவட்டச் செயலாளர்,சரவணன் திருச்சி மாவட்ட செயலாளர், செந்தாமலர் மாநில பொருளாளர் ஆகியோர் கருத்துரை வழங்கினார், இன்பராஜ் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் நன்றி உரை வழங்கினார். இப்போராட்டத்தில் சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.