தமிழகத்தில் கடந்த 45 நாட்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் பல புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.அதில் சலூன் கடைகள் தேநீர் கடைகள் உள்ளிட்டவைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று தற்போது திருச்சி மலைக்கோட்டை பகுதியில் சுமார் 700 தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.ஆனால் அவர்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படாததால்அரசு அவர்களுக்கும் அனுமதி வழங்கிட வேண்டுமென்று தரைக்கடை வியாபாரிகள் மற்றும் மனித நேய அனைத்து வர்த்தக நல சங்க மாவட்ட தலைவர் கபீர் அகமது தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் நிவாரண நிதியாக நடைபாதை வியாபாரிகளுக்கு அரசு வழங்கிய நிதியைப் போல 3000 ரூபாய் கூடுதலாக வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். Facebook WhatsApp Email Messenger Post navigation திருச்சியில் பிளஸ் 1 வகுப்பு சேர்வதற்காக பள்ளிக்கு ஆர்வமுடன் வந்த மாணவ மாணவிகள். தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1736 பேர் பதிப்பு, 77 பேர் உயிரிழப்பு சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்.