தமிழ்நாடு அரசு விதித்த பொது விதிகளின்படி பசு மற்றும் ஒட்டகம் முதலிய விலங்குகள் அதற்குரிய வெட்டப்படும் இடங்களில் (slaughter house) மட்டுமே வெட்டப்பட வேண்டும். பொதுவாக இந்த விதி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. நமது திருச்சி மாவட்டத்திலும் கடைபிடிக்கப் படுகிறது எனினும் சில நேரங்களில் இந்த விதி கடைபிடிக்கப் படுவதில்லை. எதிர்வரும் 29.06.2023 அன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்த விதியை மீறி திருச்சி மாநகரத்தின்/மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில் பசு மற்றும் ஒட்டகம் முதலிய விலங்குகள் கொல்லப்பட உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது.
இது பொது ககாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கும் என்று அச்சப்படுகின்றோம் நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு பசு மற்றும் ஒட்டகம் போன்ற விலங்குகளை அதற்குரிய வெட்டப்படும் இடங்களில் மட்டுமே வெட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இதைக் குறித்து தீர விசாரித்து பொது இடங்களில் மற்றும் ஒட்டகம் ஆகிய விலங்குகளை பசு கொல்லப்படுவதை தடுத்து அதற்குரிய இடங்களில் மட்டுமே வெட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிசத்தின் சார்பாக
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் திருச்சி மாவட்ட பசு பாதுகாப்பு பொறுப்பாளர் சசிகுமார் கோட்ட பொறுப்பாளர் முருகேசன் பஜ்ரங்தள் பொறுப்பாளர் சப்தரிஷி மாவட்ட துணைத் தலைவர்கள் சங்கர் ஜி ,ராஜகோபாலன், மாவட்ட பசு பாதுகாப்பு பொறுப்பாளர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.