தமிழ்நாட்டில் நாளை முதல் மாவட்டங்களுக்குள்பொதுப் போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணியுடன் முடிவடிகிறது.இந்நிலையில், மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28ம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, முதல்வர் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,” தற்போது நடைமுறையில் உள்ள இந்த ஊரடங்கை 28-6-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன். மேலும் மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.வகை 1 – (11 மாவட்டங்கள்) :கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை மாவட்டங்கள்வகை2 (23 மாவட்டங்கள்) : அரியலூார், கடலூர், தருமபுரி, திண்டுக்கல்,கள்ளக்குறிச்சி,கன்னியாகுமரி, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை, மதுரை, பெரம்பலூர். சிவகங்கை தேனி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை. தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்வகை 3 – (4 மாவட்டங்கள்) : சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்