தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜேக் பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி அருண் ஓட்டல் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மயில் தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் வின்சென்ட் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் முத்து ராமசாமி தமிழ்நாடு தொடக்க ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டிட்டோ ஜேக் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:- கடந்த அக்டோபர் 12 ம் பேபி பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் பள்ளிக்கல்வி இயக்குனர் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் முன்னிலையில் டிட்டோ ஜேக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட 12 அம்ச கோரிக்கைகள் மீது எந்தவித ஆணையும் மூன்று மாத காலமாகியும் இதுவரை பிறப்பிக்கப் படவில்லை ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை செயல்படுத்திட குறைந்தபட்ச நடவடிக்கைகள் கூட இல்லாத அவல நிலைக்கு டிட்டோஜேக் கடும் அதிர்ப்பிணை தெரிவித்துக் கொள்கிறது. அதேபோல் தொடக்கக் கல்வித் துறையில் 60 ஆண்டு காலமாக இருந்து வந்த ஒன்றிய முன்னுரிமை என்பதை மாற்றி அமைக்க அரசு குழு அமைத்து அரசாணை வெளியிட்டது அக்குழு யாரையும் எந்த சங்கத்தையும் அழைத்து பேசாமல் திடீரென மாநில முன்னுரிமையினை செயல்படுத்தும் அரசாணை 243 வெளியிடப்பட்டுள்ளது.
இச்செயல் தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ள அரசாணை 243 உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் அவ்வாறு திரும்ப பெறாவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது எனவும், அதன்படி வருகிற ஆறாம் தேதி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்துவது எனவும், 11ஆம் தேதி தமிழக முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் அதேபோல் 27 ஆம் தேதி மாவட்ட அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.