திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்து எதுமலை, பெருகம்பி கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 90 வருடத்திற்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரதான சாலையாக பெரகம்பில் இருந்து எதுமலை வழியாக தான் திருச்சி மாவட்டத்திற்கும் பெரம்பலூர் மாவட்டத்திற்கும் செல்ல வேண்டும். இந்த நிலையில் எதுமலையிலிருந்து பெரகம்பிக்கை செல்லும் மூன்று கிலோமீட்டர் தார் சாலை கடந்த 8 வருடத்திற்கு மேலாக போடாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள வருகிறது. கடந்த எட்டு வருடத்திற்கு முன்பு வர கம்பியில் இருந்து எது மொழி செல்லும் மூன்று கிலோ மீட்டர் சாலை மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் தார் சாலைகள் போடப்பட்டு வந்தன.
எட்டு வருடமாக வனத்துறையினர் 3 கிலோமீட்டர் சாலை வனத்துறைக்கு சொந்தமானது, சாலை அமைப்பது வனத்துறை சட்டத்திற்கு எதிரானது என காலை அமைக்க கூடாது என வனத்துறை சார்பில் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த எட்டு வருடமாக சாலை போடாமல் இருந்து வருவதால் இன்று பிறகும் கிராமத்தில் 200க்கும் மேற்பட்டோர் மூன்று கிலோமீட்டர் சாலையில் விரைந்து தார் சாலை அமைக்க வேண்டும் மின்சார வசதி வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரகம்பி கிராமத்தில் சாலையில் அமர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் வருவாய்த் துறையினரும், லால்குடி சராக காவல்துறை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் உள்ளிட்ட போலீசார் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது…. 90 வருடத்திற்கு மேலாக நாங்கள் வசித்து வருகிறோம், இத்தனை வருடங்களாக தார் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்த வனத்துறையினர் தற்போது 8 வருடங்களாக சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இதனால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பெரகம்பி, எதுமலை கிராமத்தில் மின்சாரம் மற்றும் பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டமாக தங்களது ஆதார் கார்டுகளையும், ரேஷன் கார்டுகளையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்போம் என தெரிவித்தனர்.