திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மாதம் 15ஆம் தேதி முழுவதுமாக மூடப்பட்டது அதற்கு பிறகு ஜூன் மாதம் 21ஆம் தேதி காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகளுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டது. ஒரு மாத காலமாக காந்தி மார்க்கெட் முழுவதுமாக மூடப்பட்டிருந்த நிலையில் காந்தி மார்க்கெட் கடைகளுக்கு வாடகையை அதிகாரிகள் வசூலித்து வருகிறார்கள். முழுவதுமாக காந்தி மார்க்கெட் மூடப்பட்ட நிலையில் மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் குறிப்பாக சில்லரை வியாபாரிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை கடந்த 40 நாட்களுக்கு அதிகமாக இன்றுவரை வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள்.
கடந்த மாதம் செலுத்த வேண்டிய வாடகையை காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாநகராட்சி தள்ளுபடி செய்ய வேண்டும், என்று எஸ்டிபிஐ வர்த்தகர் அணி சார்பாகவும் மேலும் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் அனைவரும் மாநகராட்சி கமிஷனரை சந்தித்து வாடகை வசூல் செய்யப்படுவதை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதில் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் தலைமையில் வர்த்தக அணி திருச்சி மாவட்ட தலைவர் பகுருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாஸ், SDTU தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மீரான், மற்றும் மாவட்ட வர்த்தக அணி செயற்குழு உறுப்பினர்களும் ஆகியோர் மனு அளித்தனர்.