மறைந்த தமிழன் டிவி திருச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விக்னேஸ்வரன் படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சி டிவிஎஸ் டோல்கேட், செங்குளம் காலனி பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் தமிழன் தொலைக்காட்சி முதன்மை செய்தியாளரும், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவருமான சகாயராஜ் கலந்து கொண்டு விக்னேஸ்வரன் திருவருட்படத்தை திறந்து வைத்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழன் தொலைக்காட்சி ஊழியர்கள் பங்களிப்பாக திரட்டப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் தாயாரிடம் சகாயராஜ் வழங்கினார். மேலும் விக்னேஸ்வரன் மறைந்த தினத்தன்று உடனடியாக அவரது ஈமச்சடங்குக்கு தமிழக அரசின் பத்திரிகையாளர் நல வாரியம் மூலம் 55 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், திருச்சி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலக உதவி இயக்குனர் பாலசுப்ரமணியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சுதாகர் மற்றும் சென்னையில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களுக்கு சகாயராஜ் நன்றி தெரிவித்து பேசினார். இந்த நிகழ்வில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மறைந்த விக்னேஸ்வரனுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *