திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் , பூனாம்பாளையம் கிராமத்தில் 50.ஆயிரம் மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டு அடர்வனமாக வளர்ந்துள்ள குறுங்காட்டினை பொது மக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக பொது மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராக தலைமையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் . நேரு திறந்து வைத்தார்.இந்த மியாவாக்கி குறுங்காடு தமிழ்நாட்டில் பொதுமக்கள் நடைபயிற்சிக்காக திறக்கப்படும் முதல் மியாவாக்கி குறுங்காடு ஆகும் . 17.11.2020 அன்று பூனாம்பாளையம் கிராமத்தில் 4.40 ) ஏக்கர் நிலத்தில் சொர்க்கம் மரம் , கொடுக்காப்புளி , நாவல் மரம் , தான்றி மரம் , அரசமரம் , பூவரசு மரம் , நெல்லி மரம் , பாதம் மரம் , மகாகனி மரம் , தேக்கு மரம் , மலைவேம்பு மரம் உள்ளிட்ட 57 வகையான 50 ஆயிரம் மரக்கன்றுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் , இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் ஒருங்கிணைப்பில் நட்டு வளர்க்கப்பட்டும் , பராமரிக்கப்பட்டும் தற்போது அடர்வனமாக வளர்ந்துள்ளது .