திருச்சி மாநகரம் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. தற்பொழுதைய கோடை வெயிலில் போக்குவரத்து விதிகளையெல்லாம் ஒரு சில வாகன ஓட்டிகள் பின்பற்றுவது கிடையாது. இதன் காரணமாக விபத்துகள் அதிகரிக்கின்றன.

இந்த விஷயங்களை தீவிரமாக கண்காணிக்கும் மாநகர காவல்துறை. தற்பொழுது காவிரி மேம்பாலத்தில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் விதமாக சாலைகளுக்கு நடுவே விபத்தில்லா தடுப்புகளை அமைத்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குறியது. பொதுமக்களாகிய நாமும் திருச்சி மாநகர காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து விபத்தில்லா மற்றும் நெரிசல்லா திருச்சியை கட்டமைப்பதில் உறுதியேற்போம்.
