திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தாளபேட்டை, திருநெடுங்குளம், கிருஷ்ண சமுத்திரம், வாழவந்தான் கோட்டை ஆகிய பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் . முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனக்கு வாக்களித்த வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

ஊராட்சிகளின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று வாக்காளர்களைச் சந்தித்த வேட்பாளர் அன்பில் மகேஸ், தனக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சி நிர்வாகிகளும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் இந்த நன்றி அறிவிப்பு நிகழ்வில் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
