அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை கழக அறிவிப்பின்படி அதிமுக துணை பொதுச்செயலாளரும் திண்டுக்கல் மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் மற்றும் விழுப்புரம், கோவை, புதுக்கோட்டை ஈரோடு திருச்சி கரூர் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கடந்த 1980 ம் ஆண்டு முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சிறப்பான முறையில் கழகப் பணிகளை ஆற்றி வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான ஆர்.மனோகரன் அவர்கள் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அதிமுக கழக நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்