தமிழக வெற்றி கழகம் திருச்சி கிழக்கு தொகுதி காந்தி மார்க்கெட் பகுதி மற்றும் காவிரி மருத்துவமனை இணைந்து பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் வார்டு மக்கள் குறை தீர்ப்பு முகாம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது.

இந்த இலவச மருத்துவ முகாமில் திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் சீனிவாசன் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கௌதம் ஆகியோர் கலந்து கொண்டார். அவர்களுக்கு திருச்சி கிழக்குத் தொகுதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த இலவச மருத்துவ முகாமில் பொது மருத்துவம், கண் பரிசோதனை, பல் மருத்துவம், இதய மருத்துவம், இசிஜி மற்றும் ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முகாமில் மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தின் காந்தி மார்க்கெட் பகுதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்