இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஸ்டாலின் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

விழாவின் துவக்கமாக மூவர்ண தேசிய கொடியை ஸ்டாலின் நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் பெருமாள் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது மேலும் குழந்தைகளுக்கான இசை சுற்று நாற்காலி போட்டி, பெண்கள் குழு மற்றும் ஆண்கள் குழுவினருக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றது

இந்த சுதந்திர தின விழாவிற்கு சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றிட சங்கத் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார் சங்க பொருளாளர் திவாகர் ராஜா முன்னிலை வகித்தார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கினர்.

விழாவில் உதவி தலைவர், துரை கலியபெருமாள், உதவி செயலாளர், யோகா குரு சின்னையன், உதவி பொருளாளர் திரவியம், செயற்குழு உறுப்பினர்கள், ஜெகநாதன் லட்சுமணன், ஜெயக்குமார், பெருமாள், செந்தில்குமார், சேகர், ராஜன், மற்றும் மகளிர் இளைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விழாவினையும் விளையாட்டுப் போட்டிகளையும் சிறப்பாக நடத்தினார்கள்.
