தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அவரது திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு பல்வேறு. அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புக்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அண்ணாவின் நினைவுகளைப் போற்றி வருகின்றனர்.

அதன்படி சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். அண்ணாவின் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தமிழக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ், துணை சபாநாயகர் ரவிசங்கர், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் சீனிவாசன் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்