தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகி பன்னீர் செல்வம் வரவேற்புரையாற்றிட, தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாசிலாமணி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் சுப்பையா, மாவட்ட பொருளாளர் பிச்சைபிள்ளை, நிர்வாகி சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

‎

‎இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக AAO/AHO பணியினை தொழில்நுட்ப பணியாக அங்கீகரித்து, அதற்குரிய ₹9300+4200 க்கு இணையான ஊதியம் வழங்க கோரியும், UATT 2.0 வை முழுமையாக செயல்படுத்தி, தலைமை இடங்களில் விவசாயிகளுக்கு சேவை புரிய ஒருங்கிணைந்த கிராம வேளாண்மை விரிவாக்க சேவை மையம் ஏற்படுத்தி தரக்கோரியும், DCS பணியில் நீதிமன்ற ஆணை மற்றும் அரசாணை எண் 15ஐ முழுமையாக செயல்படுத்தி. DCS பணியில் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும், துறையின் அனைத்து பணிகளும் இணைய பதிவேற்ற மூலம் நடைபெறுவதால் இணைய வசதியுடன் கூடிய கையடக்க கணினி வழங்க கோரியும், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் ற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை 100% மானியத்தில் வழங்க கோரியும், மக்காச்சோளம் உள்ளிட்ட விதை விநியோகத் திட்டங்களில் விவசாயிகள் விரும்பாத ரகங்களை திணிக்காமல் விரும்பும் ரகங்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ள பின்னேற்பு மானியம் வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறுதியாக மாவட்ட துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்