கனரா வங்கி பணியாளர்கள் சங்கத்தின் (தமிழ்நாடு) 4-வது மாநில மாநாடு, திருச்சி ஹோட்டல் அருணில் தோழர். எம்.ஆர்.ஷெனாய் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கனரா வங்கி பணியாளர்கள் சங்க தலைவர் சிவலிங்கம் மாநாட்டு கொடியை ஏற்றிவைத்து மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ் துவக்கவுரையாற்றினார். கனரா வங்கி பணியாளர் சங்க செயலாளர் வெங்கடேஷ், பிஇஎப்ஐ தமிழ்நாடு பொதுச் செயலாளர் சுனில்குமார், இணைச் செயலாளர் புவனேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில் வங்கி துறையில் வாரம் 5 வேலை நாட்கள் பணியினை அமல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். வங்கிப் பணியில் அனைத்து மட்டங்களிலும் தேவைக்கேற்ப ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். நியாயமான மற்றும் வெளிப்படையான இடமாற்றல் கொள்கையை அமல்படுத்த வேண்டும். தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். துணைநிலை ஊழியர்களின் பிரச்சினைகளில் தீர்வு காண வேண்டும். வங்கி பெண் ஊழியர்களுக்கான அடிப்படை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வங்கி பணிகளில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஊதிய பாகுபாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, கனரா வங்கி பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் பிரேமலதா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்