திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சி மரக்கடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு பொறுப்பேற்று ஆறு மாத காலத்திற்குள் இதுவரை இல்லாத அளவு விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. சாமானிய மக்கள் பின் தங்கிய மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

விஜயின் பேச்சைக் கேட்டு வாக்களித்த மக்கள் தற்போது ஏமாற்றத்தில் உள்ளனர், முதல்வராக இருந்து ஆறு மாதத்தில் விஜய் செய்த சாதனை என்ன என கேள்வி எழுப்பினர். அரிசி பருப்பு, வெங்காயம், இஞ்சி, பூண்டு என அத்தியாவசிய பொருட்களின் விடை பல மடங்கு ஏறியுள்ளன.

விலைவாசி உயர்வு விண்ணை மட்டும் அளவில் உள்ள நிலையில் தமிழக அரசோ எம்எல்ஏக்களுக்கு சொகுசு கார் வழங்குகிறது. தமிழக அரசு அடிப்படை மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்