கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் MLA அவர்களின் ஆணைக்கிணங்கவும் பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா அவர்களின் வழிகாட்டுதலின்படியும், லட்சிய ஜனநாயக கட்சியின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் எனப் போற்றப்படும் தியாகி வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநகர் மாவட்டச் செயலாளர் தில்லை எம்.ஆர். சதாம், தெற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ். கண்ணன், வடக்கு மாவட்டச் செயலாளர் சசிகுமார் ஆகியோர் ஒன்றிணைந்து தலைமை தாங்கினர். மேலும், திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
