திருச்சி மாவட்ட முடி திருத்தும் தொழில் நலச் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் முடிதிருத்தும் தொழிலை தற்போது கார்ப்ரேட் பெருநிறுவனங்கள் முடிதிருத்தும் தொழிலை கையில் எடுத்து சிறு கடைகளை மூட தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஆகவே, இந்த வகையான கார்பரேட் நிறுவனங்கள் உரிமைகளை அரசு வழங்க கூடாது முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த நிபந்தனையற்ற வங்கி கடன் வழங்க வேண்டும், தமிழக அரசு கோயில்களில் முடி திருத்தம் செய்வோருக்கு ரூ.5000 வழங்குவதாக தெரிவித்துள்ளனர் அதனை ரூ 15,000 உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.