தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் 4-வது மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அன்பு மாநகர் மாவட்ட தலைவர் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் சேவா தள மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி மற்றும் பொறுப்பாளர்கள் பாலாஜி அப்துல் குத்திஸ், விக்டர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு மாநிலத் தலைவர் மகாத்மா சீனிவாசன் பேட்டியளிக்கையில்.

 

பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து கடந்த மாதம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 900 கிலோ மீட்டர் தொலைவு வரை 56 தோழர்களுடன் சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் நிறைவுபெற்றது அதன் தொடர்ச்சியாக திருச்சியில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டியில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை ஏற்றத்தை கொண்டுவரப்படும் என தெரிவித்தார் அப்படிக் கொண்டு வந்தால் எங்கள் போராட்டம் வெற்றி பெற்றதாக நினைப்போம். இதனால் விலைவாசி குறைந்து மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில தலைவர் மகாத்மா சீனிவாசனை காங்கிரஸ் சேவா தள மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இந்த செயற்குழு கூட்டத்தின் மூலம் வருகிற உள்ளாட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக மாவட்டந்தோறும் 75 மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து மாவட்ட துணைத்தலைவர்களை பொறுப்பாளராகவும், பொதுச் செயலாளர்களை துணை பொறுப்பாளராகவும் நியமித்து கட்சியை பலப்படுத்துவோம் மேலும் மாவட்டம்தோறும் காங்கிரஸ் மனித உரிமை துறையில் ஆயிரம் பேரை நிர்வாகிகளாக நியமித்து கட்சி சார்பில் மக்களுக்காக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் இதன்மூலம் ராகுல்காந்தி அவர்களின் கரத்தை, தமிழக தலைவர் கே எஸ் அழகிரி அவர்களின் கரத்தையும் வலுப்படுத்துவோம்,

காவல்துறையினர் எப்போதும் மக்களுக்கு உற்ற நண்பர்களாக இருந்து வருகின்றனர் இதில் ஒரு சிலர் அத்துமீறி நடந்து கொண்டிருக்கின்றனர் அவர்களை காங்கிரஸ் மனித உரிமை கண்டிக்கிறது மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் 3 ரூபாய் விலை குறைத்துள்ளார் அதற்கு மகிழ்ச்சி. பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை ஜிஎஸ்டிகுள் கொண்டு வரவில்லை என்றால் சென்னையில் வருகிற நாட்களில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *