திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு, நியூ டெல்லி உணவு பாதுகாப்புத்துறை ஆணையரகத்தின் சார்பாக வழங்கப்பட்ட BHOG -Blissful hygienic offering God (உன்னதமான உணவு கடவுளுக்கு படைத்தல்) சான்றிதழினை
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலின் இணை ஆணையர் கல்யாணி திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபு உடனிருந்தார்.