பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சி மணிமண்டபம் சாலையில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் சுமார் 108 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், வழக்கு போடுவதற்காக இரண்டு உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுபாய்வு கூடத்திற்குஅனுப்பிவைக்கப்பட்டுள்ளது.மேலும், மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற பொருட்கள் கட்டாயம் விற்பனைக்கு வைத்திருக்க கூடாது என்றும், வைத்திருந்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.