திருச்சி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்கள் அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீயிட்டு அழிக்கப்பட்டது.

குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதனடிப்படையில் குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிந்து, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 13 காவல் நிலையங்களில் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ்பாபு முன்னிலையில், பொன்மலை காவல் உதவி ஆணையர் தலைமையில், 3600 கிலோ எடையுள்ள 5லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் தீயிட்டு அழித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *