திருச்சி மெகா ஸ்டார் எதிரே உள்ள இந்திய மருத்துவ மன்ற வளாகத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15- நாட்களுக்கு நடைபெறும் அரசு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட கலெக்டர் சிவராசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து கலெக்டர் சிவராசு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:-
கைத்தறி விற்பனையில் கடந்த ஆண்டு 50 லட்ச ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கிட்டத்தட்ட 79.5 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு 1 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 சதவீதம் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தையொட்டி இதனை பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து கைத்தறியை வாங்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா 2-வது தடுப்பூசியுடன் பூஸ்டரும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு 15 முதல் 48 வயது வரை உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் பொதுமக்களுக்கு முன்பிருந்த விழிப்புணர்வு தற்போது இல்லை, மேலும் 50% பேர் மாஸ்க் போடுவதில்லை. கிட்டத்தட்ட பொது இடங்களில் நெருங்கிய இருக்கிறார்கள். ஒமைக்ரான் நோய்தொற்று முதலாவது அலை, இரண்டாவது அளவைவிட கடுமையான பாதிப்பு இல்லை என்றாலும் வேகமாக பரவக்கூடிய தன்மை உடையது. ஒமைக்ரான் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். தயவுசெய்து மாஸ்க் ஒழுங்காக போட்டு, தடுப்பூசி போட்டுக் கொண்டாலே போதும் எந்த ஒரு பாதிப்பும் வராது. திருச்சியில் 87% பேர் முதலாவது தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இரண்டாவது தடுப்பூசி 58 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போடாதவர்கள் 11% பேர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இரண்டாவது தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் 180000/- பேர் இருக்கின்றனர் அவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஒமைக்ரான் அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
தற்போது விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, +2 பள்ளி மாணவர்களுக்கு ஒரு சில இடங்களில் தனியாக சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகிறது அதனை தடுக்கவில்லை. ஆனால் அதை தவிர மற்ற வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு தனியாக சிறப்பு வகுப்புகள் எடுத்தால் அந்த தனியார் பள்ளி மீது கடுமையான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் 410 பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 130 பள்ளி கட்டிடங்கள் சரி செய்யப்படலாம் எனவும், மீதமுள்ள அனைத்து பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.