திருச்சி பிராட்டியூர் அருகே நேற்று இரவு வட்டார போக்குவரத்துத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது குஜராத் மாநிலத்திலிருந்து சுற்றுலா பஸ் ஒன்று 41 பேருடன் திருச்சி வழியாக ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த தனியார் பஸ்சை நிறுத்தி வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அதில் பஸ்சுக்கு உரிய பர்மிட் இல்லாமல் குஜராத்தில் இருந்து தமிழகத்திற்கு ஓட்டி வந்தது தெரிய வந்தது . உடனடியாக அந்த பஸ்சுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அபராத தொகையை கட்டாததால் அந்த தனியார் பஸ் பறிமுதல் செய்யப்பட்டு திருச்சி பிராட்டியூர் போக்குவரத்து அலுவலகத்தில் பெண் பயணிகள் உள்ளிட்ட 41 பேருடன் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.