தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி வாயிற் கூட்டம் இன்று நடந்தது. இந்த வாயிற் கூட்டத்திற்கு கோட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியம் துவக்க உரையாற்றினார் மேலும் கோட்ட செயலாளர் இளங்கோவன் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினார்.
இந்த வாயிற் கூட்டத்தின் கோரிக்கைகளாக:-
நெடுஞ்சாலைகளை பராமரிக்க 5 கிலோ மீட்டருக்கு 2 சாலைப் பணியாளர்கள் என பணியிட ஒப்புதல் வழங்கி கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க கோரியும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணப்பலன்களை வழங்க கோரியும், சாலைப் பணியாளர்களுக்கு அண்ட் ஸ்கில்ஸ் எம்ப்ளாயி தொழில்நுட்பக் கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கு இணையான ஊதியம் 5200 முதல் 20,200 தர ஊதியம் ரூபாய் 1900 வழங்கக் கோரியும், சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலத்திலும் பனிக்காலத்திலும் உயிர் நீத்தவர்களின் வாரிசுகள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி விண்ணப்பித்து பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு சிறப்பு கவனம் செலுத்திநெடுஞ்சாலைத்துறைலேயே கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.அதனைத் தொடர்ந்து கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த சங்க கொடியை ஏற்றி வைத்தனர் இறுதியாக கோட்ட பொருளாளர் பிரான்சிஸ் நன்றி உரையாற்றினார்.