திருச்சி மேலப்புலிவார்டு ரோட்டில் உள்ள இப்ராஹிம் பார் எதிரே உள்ள எல் கே எஸ் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது இந்த வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் பிளாஸ்டிக் பைப்புகள் மோட்டார் உள்ளிட்டவை விற்பனை செய்யும் இரண்டு கடைகளில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் கடையின் ஷட்டரை நெம்பி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஒரு கடையில் 2 லட்சத்தி 50 ஆயிரம் ரொக்கப் பணமும் மற்றொரு கடையில் 50 ஆயிரம் ரொக்கப்பணம் என சுமார் 3 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருந்தது. தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடம் வந்த கோட்டை போலீசார் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் கொள்ளையர்களை தேடும்பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
இதேபோல் நடுகுஜிலி தெருவில் இன்று கடையின் ஷட்டரை நெம்பி திருட முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி கோட்டை காவல் நிலையல எல்லைக்குட்பட்ட நடு குஜிலி தெருவில் இன்று அதிகாலை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு உள்ள ஜெய் எலக்ட்ரானிக்ஸ் கடையின் ஷட்டர் கையால் லேசாக நெம்பி இருப்பதை கண்டு போலீசார் கடை உரிமையாளர் வீரேந்திர சிங் இடம் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து கடை உரிமையாளர் வந்ததும் கதவை திறந்து பார்த்த போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் 3 பேர் வந்தது பதிவாகி இருந்தது.
அதில் மூன்று பேரும் கதவை கையால் லேசாக நெம்பி ஒருவர் மட்டும் உள்ளே சென்று பணம் பொருளை தேடி உள்ளார். அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றதும் அவர்கள் திரும்பி சென்றதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.