திருச்சி மாவட்டத்தில் இன்று 18 ம் சுற்று “கொரோனா 19” சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகிறது. திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல்.
தமிழகமெங்கும் கொரோனா நோயை தடுக்கும் பொருட்டு 15 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது . இதனையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் 15 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது இதுவரை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2004203 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது .
மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகமெங்கும் 17 சுற்றுகளாக நடைபெற்றன . இதனை தொடர்ந்து மீண்டும் 08.01.2022 அன்று தமிழகமெங்கும் 18 ம் சுற்று கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது . இதனையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் இன்று ஊரக பகுதிகளில் 314 இடங்களிலும் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 200 இடங்களிலும் என மொத்தம் 514 இடங்களில் கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன . கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் இருவகையான தடுப்பூசிகளையும் முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை செலுத்த தவறியவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைபேசி எண்ணுடன் அருகில் உள்ள முகாமிற்கு சென்று தங்களுக்கு உரிய தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு கொரோனோ நோயிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டு கொள்கிறார் . . கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே முழுமையான பாதுகாப்பு கிடைக்கும் என்ற மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி பொது மக்கள் அனைவரும் இரண்டு தவணைகள் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டு கொரோனா நோயிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது .