பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில். அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட மனைவி வீட்டிற்கு சென்று 10 லட்சம் காசோலை கொடுத்து வந்தோம். மாணவி தற்கொலை செய்து கொண்ட விசயம் அரசியல் ஆக்கப்பட்டு உள்ளது.
கட்டாயமாக மத மாற்றம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். மாணவியின் குடும்பம் பற்றியும், அவரது தாய் பற்றியும் அவதூறு பரப்பும் வகையில் யாரும் பேச கூடாது. தமிழக அரசு காவல்துறையினரை அழுத்தத்தில் வைத்து உள்ளனர், தமிழக முதல்வர் கம்பீரமாக செயல்பட்டு காவல்துறை அதிகாரிகளை அவர்கள் போக்கில் செயல்பட விட வேண்டும். மாணவியின் வாக்குமூலம் வீடியோ வெளியீட்டுக்கு என்னை கைது செய்ய வேண்டும் என கூறியவர்கள் சட்டத்தை தெரிந்துகொள்ள வேண்டும். பாஜக மீது மத சாயம் பூசப்படுறது.நாளை கிருஸ்தவ பெண் அல்லது மாற்று மாத பெண் இறந்தாலும் பாஜக உடன் நிற்கும் என கூறினார்.